மேலும்

அடுத்தடுத்து சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்

us-deligates-mangala (1)அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், பீற்றர் ரொஸ்கம் தலைமையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழு கடந்த 20ஆம் நாள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது..

இந்தக் குழுவினர் சிறிலங்கா அதிபர், வெளிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்ததுடன், அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் கொண்ட மற்றொரு குழு நேற்று சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் குழுவில் பொப் குட்லெட், ஜக்சன் லீ, ஹோல்டிங், கூலர், ஸ்மித், ஜோன்சன் உள்ளிட்டவர்கள் அடங்கியிருந்தனர்.

us-deligates-mangala (1)us-deligates-mangala (2)

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான இந்தக் குழுவினர், நேற்று கொழும்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி  சில்வாவையும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவிலான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு  வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தச் சந்திப்புகளில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *