மேலும்

அமெரிக்காவுடனான உடன்பாட்டை ரத்துச் செய்ய சிறிலங்கா அமைச்சரவை முடிவு

iranawila-voice-of-americaஇரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த உடன்பாட்டை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிலாபம்- இரணவில பகுதியில் சுமார் 520 ஏக்கர் பரப்பளவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு கோபுரங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப வசதிகளை அமைப்பதற்கு அனுமதிக்கும் உடன்பாடு  1983இல் அமெரிக்காவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.

இதன் பின்னர், 1994இல் இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படும் சூழலில் இரணவிலவில் உள்ள வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையிலேயே இதுதொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து. வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையம் அமைந்திருந்த நிலப்பரப்பு சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது.

இந்த நிலப்பரப்பை தமக்கு வழங்குமாறு சீனா கோரியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *