சிறிலங்கா கடற்படைத் தளபதி மீதான குற்றச்சாட்டு – பாதுகாப்பு அமைச்சு விசாரணை
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தாக்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி, ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்த போது குறித்த ஊடகவியலாளர் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவினார் என்பது உறுதியாகியுள்ளது.
விசாரணைகள் முடியும் வரையில் இதுதொடர்பாக கடற்படை வேறு எந்த கருத்துக்களையும் வெளியிடாது” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மறுப்புத் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்பதை தாம் விசாரணையின் போது வெளிப்படைத்தன்மையுடன் கூறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.