மேலும்

போர் தொடர்பாக ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-1சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய, ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த நூலை வெளியிட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச். செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ, கடற்படைத் தளபதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எனினும், தற்போது சேவையில் உள்ள படைத் தளபதிகளோ, அரசாங்கப் பிரமுகர்களோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-1war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-2war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-3war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-4

ஓய்வு பெற்ற சிறிலங்கா படைத் தளபதிகள் போர் தொடர்பான தமது அனுபவங்களைத் தற்போது நூல்களாக எழுதி வருகின்றனர்.

அண்மையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரின் நூல்கள் வெளிவந்துள்ள நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய நூலும் வெளியாகியிருக்கிறது.

‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்’ நூலை எழுதியுள்ள ஜெனரல் ஜெரி டி சில்வா, 1994ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.

இவரது காலத்திலே, சிறிலங்கா இராணுவம் ரிவிரெச நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் – டெய்லி மிரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *