மேலும்

நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை

maithriகட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி,  நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.

சிறிலங்காவில், ஒரு கட்சியை உடைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி, ஆட்சியைப் பிடித்ததாக வரலாறு இல்லை.

ஐதேகவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய காமினி திசநாயக்கவும், லலித் அத்துலத் முதலியும் அதற்கு உதாரணம்.

வரும் உள்ளூராட்சித் தேர்தலில், கை சின்னத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கருத்து “நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை”

  1. Karunakaran says:

    Srilanka is in the hands of terrorism of Buddhist, there is no rules and regulations,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *