மேலும்

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமனம்

Brig. Roshan Seniviratneசிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.08.2016) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர வெளிநாட்டுப்ப பயிற்சி ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அந்தப் பதவிக்கு பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பிரதி இராணுவ இணைப்பதிகாரியாக பணியாற்றினார்.

Brig. Roshan Seniviratne

கவசப்படைப்பிரிவில் 30 ஆண்டுகள் பணியாற்றியவரான பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன, யாழ். அதிரடிப்படைத் தலைமையகம், மற்றும் காலாட்படைப்பிரிவுகள், றெஜிமென்ட்களில் முக்கியமான பல பதவிகளை வகித்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *