மேலும்

95 வீதமான தமிழர்கள் சமஷ்டியையே கோரினர் – விஜேநாயக்கவுக்கு தவராசா பதிலடி

S.Thavarasaவடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் 95 வீதமான தமிழர்கள், சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர் என்று, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பிரதிநிதியாகப் பணியாற்றிய எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராகப் பணியாற்றிய லால் விஜேநாயக்க நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வடக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் சமஷ்டியைக் கோரவில்லை என்றும், தமிழ் அரசியல்வாதிகளே அதனைக் கோரியதாகவும் தெரிவித்திருந்தார்.

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கே பலமான ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தை மறத்துள்ள புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினரும், வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.தவராசா, வடக்கு,கிழக்கு மக்கள் சமஷ்டியைக் கோரினர் என்பதற்கு ஆவண ரீதி்யான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

எல்லா ஆலோசனைப் பரிந்துரைகளினதும் பிரதிகள் என்னிடம் உள்ளன என்றும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழர்கள் சமஷ்டியைக் கோரவில்லை என்று கூறுமாறு  விஜேநாயக்கவை சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *