மேலும்

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது – ஒளிப்படங்கள்

salawa-camp-damage (2)கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்களால் சிதைந்து போயிருப்பதுடன், எங்கும் குண்டுகளின் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன.

salawa-camp-damage (1)

salawa-camp-damage (2)salawa-camp-damage (3)salawa-camp-damage (4)salawa-camp-damage (5)salawa-camp-damage (6)salawa-camp-damage (7)இந்தக் கிராமத்தில் வசித்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால், சலாவ நகரப் பகுதியில் இருந்த கடைகள் சிதைந்து போயிருக்கின்றன.

எனினும், முகாமின் மத்திய பகுதிக்குள் இன்னமும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறியவிலான வெடிப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் எலும்புக்கூடு போன்று காட்சியமளிப்பதை வானத்தில்  இருந்து எடுக்கப்பட்ட படங்கள், மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *