மேலும்

விபத்துக்குள்ளாகி வீழ்ந்தது சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி

Bell 206சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இன்று முற்பகல் பயிற்சியின் போது வி்பத்துக்குள்ளாகி, பலத்த சேதமடைந்தது.

அமெரிக்கத் தயாரிப்பான, பெல்-206 உலங்குவானூர்தியே விபத்துக்குள்ளானதாக, சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் பயிற்சி விமானி ஒருவர், உலங்குவானூர்தியை கிளப்ப முயன்ற போது, அது பக்கவாட்டாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் உலங்குவானூர்தி பலத்த சேதமடைந்தது. எனினும், இதில் இருந்தவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *