மேலும்

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை – இரா.சம்பந்தன்

sampanthan-rகிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவதாவது-

சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள வடக்கு தமிழர்களுக்கு சொந்தமான காணிகளைப் பார்வையிடுவதற்கும் ஆராய்வதற்குமே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

நாம் அங்கு சென்றபோது இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில் திறந்து விடப்பட்டதன் காரணமாகவே முகாமுக்குள் உள்நுழைந்தோம்.

மாறாக தற்போது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ இல்லாவிட்டால் கருத்தாடல்களின் பிரகாரமோ நாம் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை.

இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்யக் கோரும் நபர்களின் கூற்றுக்களை நிராகரிப்பதுடன் எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருத்து “கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை – இரா.சம்பந்தன்”

  1. மனோ says:

    யாரைப் பார்க்க ?அவரின் அழைப்பு அல்லது முன் அனுமதி பெற்றாரா இல்லையா ? என்பதே சிங்களம் விடுக்கும் வினாக்கள்.

    இவர் தம்மை ஒரு தமிழனாக நினைக்காமல் நடந்து கொண்டாலும். பிறப்பால் தமிழன் அதனால் சிங்களத்தின பகையாளியாக துட்ட கெமனுவும் ஒவ்வொரு சிங்களவனும் பார்க்கிறான் என்ற பாடத்தை இனியாகிலும் ஐயா படித்துக் கொள்வது அவருக்குத்தான் நல்லது.

    முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் வெள்ளைக் கொக்காகி விடாது. சிங்களம் ஆளும் இனம் இவர் ஒரு அடிமை இனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *