மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய தெரிவுக்குழு நியமனம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் 11 பேர் கொண்ட சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்தக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
• முனீர் முலாஃபர்
• சட்டத்தரணி சுனில் வட்டகல
• அருண் ஹேமச்சந்திரா
• ரஞ்சித் மத்தும பண்டார
• மனோ கணேசன்
• லக்ஷ்மன் நிபுண ஆராச்சி
• சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம்
• சமன்மலி குணசிங்க
• தர்மபிரிய விஜேசிங்க
• சந்தன சூரியாராச்சி
• நிசாம் காரியப்பர்
