மேலும்

சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

Silk Road Cooperation-2015  (1)சிறிலங்கா- சீன இராணுவங்களின் சிறப்புப்படைப் பிரிவுகள் மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி இன்று சிறிலங்காவில் ஆரம்பமாகியுள்ளது.

பட்டுப்பாதை பயிற்சி – 2015 போர்ப்பயிற்சியின் இரண்டாவது கட்டமே இன்று காலை புத்தலவில் உள்ள அதிகாரிகள் திறன் விருத்தி நிலைய மைதானத்தில் நடந்த ஆரம்ப நிகழ்வை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளது.

இன்று தொடக்கம் 28ஆம் நாள் வரை முதற்கட்ட பயிற்சி, கொமாண்டோ படைப்பிரிவின் ஊவா குடாஓயா பயிற்சி பாடசாலையிலும், இரண்டாம் கட்டப் பயிற்சி ஜூன் 28ஆம் நாள் தொடக்கம் ஜூலை 5ஆம் நாள் வரை கணேமுல்லவில் உள்ள  கொமாண்டோ படைப்பிரிவு தலைமையகத்திலும், மூன்றாவது கட்டப் பயிற்சி ஜூலை 5ஆம் நாள் தொடக்கம், ஜூலை 13ஆம் நாள் வரை மாதுருஓயா சிறப்புப் படைப்பிரிவு பயிற்சிப் பாடசாலையிலும், நடைபெறவுள்ளன.

Silkroute-ex (1)

Silkroute-ex (2)

Silkroute-ex (3)

Silkroute-ex (4)

Silkroute-ex (5)

இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சியில், ஆயுதங்களைக் கையாளுதல், மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக் கல்வி, சூட்டுப் பயிற்சி, குறிபார்த்துச் சுடும் பயிற்சி, இடுக்குகளின் ஊடான சூட்டுப் பயிற்சி, உடற்காப்பு பயிற்சி, பதுங்கித் தாக்குதல்,  வேவு நுட்பங்கள். சிறப்பு நடவடிக்கைக்குத் திட்டமிடல், தேடல் நுட்பங்கள், சூழ்நிலை பயிற்சி ஒத்திகை, காட்டுப் போர்முறை, அடிப்படை சண்டை பயிற்சி, வாகன பதுங்கித் தாக்குதல், விமான மற்றும் கட்ட்ட பயிற்சிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

பட்டுப்பாதை கூட்டுப் பயிற்சியின் முதலாவது கட்டம், சீனாவில் கடந்த மார்ச் 29ஆம் நாள் தொடக்கம், ஏப்ரல் 17ஆம் நாள் வரை இடம்பெற்றது.

இதில் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த 42 பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில், இன்று ஆரம்பமாகியுள்ள கூட்டுப் பயிற்சியில், சீன இராணுவத்தைச் சேர்ந்த லெப்.கேணல் கியூய் கியாங் தலைமையில், 43 பேரும், 43 சிறிலங்கா கொமாண்டோக்களும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சி வரும் ஜூலை 13ஆம் நாள் நிறைவடையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *