மேலும்

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா இராணுவம்

Maj.Gen.Nandana Udawatte-pressவடக்கில் சிறிலங்கா இராணுவம் நிலை கொண்ட பின்னரே, போதைப்பொருள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகவும், சிறிலங்கா இராணுவமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிராகரித்துள்ளார்.

பலாலிப் படைத்தளத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா இராணுவம் உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது. எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை.

Maj.Gen.Nandana Udawatte-pressஅண்மைக்காலத்தில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

1963 ஆம் ஆண்டு பலாலியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டதன் முக்கியமான ஒரு நோக்கமே, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *