மேலும்

Tag Archives: கொட்டாஞ்சேனை

முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

11 தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் – சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்

கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை

கொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.