மேலும்

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தலைமன்னாரில் இருந்து இன்று பிற்பகல் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்த இந்தியப் பிரதமர், யாழ்.பொது நூலகம் அருகே இந்திய உதவியுடன் அமைக்கப்படவுள்ள கலாசார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அதையடுத்து அங்கு நடந்த கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

அதையடுத்து, யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், டெனீஸ்வரன், மருத்துவர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதையடுத்து, இளவாலை மேற்குப் பகுதியில், இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட நான்கு வீடுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளுக்கு வழங்கினார்.

அந்த வீடுகளில் ஒன்றில் பால்காய்ச்சும் நிகழ்விலும் மோடி கலந்து கொண்டார்.

அதையடுத்து அங்கு உரையாற்றிய அவர், அதையடுத்து, கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவிலில் இந்தியப் பிரதமர் வழிபாடுகளை நடத்தினார்.

அதை முடித்துக் கொண்டு, பலாலி சென்று அங்கிருந்து கொழும்புக்குப் பயணமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *