மேலும்

மதுரையில் நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்பு

மறைந்த ஈழக்கவிஞரும், புதினப்பலகை ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றுமாலை தமிழ்நாட்டின் மதுரை நகரில் நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக மண்டபத்தில் இன்று மாலை 6 மணியளவில் இரா. திரவியம் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில், மறைந்த கி.பி. அரவிந்தன் அவர்களுக்கு இரண்டு நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

அதையடுத்து, கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்தை ஓவியர் வீ.சந்தானம் திறந்து வைத்து, மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்வில் பங்கு கொண்டோர், மலர் வணக்கம் செலுத்தினர்.

பின்னர், ஓவியர் வீர.சந்தானத்தின் சிறப்புரை இடம்பெற்றது.

??????????????????????

அதையடுத்து, எழுத்தாளர்கள் பா.ஜெயப்பிரகாசம், பாமரன், கவிஞர் வைகறை, முனைவர் அரணமுறுவல், சி.அறிவுறுவோன், குமரிமைந்தன், வழக்கறிஞர்கள் ஜெபராஜ், அகராதி, மற்றும் சி.தர்க்கீகச்செல்வம் உள்ளிட்டோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

கி.பி.அரவிந்தன் அவர்களுடன் தமக்கு இருந்த நட்பு மற்றும் அவருடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து இவர்கள் தமது நினைவுரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பெருமளவான அவரது தோழர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *