மேலும்

Tag Archives: நீதிமன்றம்

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்த மைத்திரியின் படம் அகற்றப்பட்டது

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

நீதிமன்றத் தாக்குதல் குறித்து விசாரிக்க 15 பேர் கொண்ட சிஐடி குழு யாழ். வருகை

யாழ். நீதிமன்றம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக, சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட விசாரணைக் குழு யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு யாழ்.நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கே.பி நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகளின் முன்னைய ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.