மேலும்

மகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பிலியந்தலைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பதிவு செய்யப்படாத, வேகப்பந்தயக் கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

பதிவு செய்யப்படாத இந்த கார், தனது நண்பருக்குச் சொந்தமானது என்று வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

எனினும் அதற்குரிய எந்த ஆவணத்தையும் அவர் வழங்கவில்லை.

இது மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களால் பயன்படுத்தப்பட்ட வேகப் பந்தயக் கார்களில் ஒன்று எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

mahinda-car

68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் சிக்கின

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் உருவப்படங்கள் பொறித்த சுவர் 68,000  சுவர் மணிக்கூடுகளை சிறிலங்கா காவல்துறை இன்று கைப்பற்றியுள்ளது.

சபுகஸ்கந்தை, மாபிம பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்துக்கிடமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலில், இவை கைப்பற்றப்பட்டன.

இந்தக் களஞ்சியசாலையை மாதமொன்றுக்கு 1.5 மில்லியன் ரூபா வாடகைக்கு துறைமுக அதிகாரசபைக்கு வழங்கியிருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

படம்- டெய்லி மிரர்

படம்- டெய்லி மிரர்

கப்பலில் இருந்து 3000 துப்பாக்கிகள் மீட்பு

mahanuwara-shipகாலித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து 3000 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

‘மாகாநுவர நவுகாவ’ என்ற பெயரில், சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பலில், 12 கொள்கலன்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி-56 துப்பாக்கிகள் 84 அடங்குவதாகவும், ஏனையவை அரை தன்னியக்க மற்றும் தன்னியக்கத் துப்பாக்கிகள் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் கோத்தாபய ராஜபக்சவினால், மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *