மேலும்

ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் சிறிலங்கா அரசால் விடுதலை

indian-fishermenபோதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். (3ம் இணைப்பு)

ஐந்து மீனவர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, சிறிலங்காவின் குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இதனை, சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து பேரும் இந்திய அதிகாரிகளுடன் இன்றே இந்தியா திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், “மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்தியத் தூரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அங்கு அவர்கள் தண்டனையை அனுபவிக்கத் தேவையில்லை.

அவர்களை அங்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

fishermen-release

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி,  மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து, தண்டனையில் இருந்து விடுவித்துள்ளார்.

இதற்கு இந்தியத் தூதுவர் வைகே சின்கா நன்றி தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியதில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் இதுபற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மீனவர்கள் விடுவிக்கப்பட்டது, மோடி அரசாங்கத்தின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *