கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 7000 பக்தர்கள் பங்கேற்பு
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் சீராக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உதவ வேண்டும் என்று ஒஸ்ரிய அதிபரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று நேற்று சிறிலங்கா காவல்துறையால் வெளியிடப்பட்ட – வரையப்பட்ட உருவப்படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் போது, சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.
மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.