மேலும்

Archives

லசந்த கொலை சந்தேகநபர்களில் ஒருவர் கப்டன் திஸ்ஸ – ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு?

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று நேற்று சிறிலங்கா காவல்துறையால் வெளியிடப்பட்ட – வரையப்பட்ட உருவப்படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இலங்கையர்களை தாயகம் திரும்ப சிறிலங்கா அதிபர் அழைப்பு

போரின் போது, சிறிலங்காவில் இருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்கள் அனைவரையும், மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

வடக்கிலுள்ள மக்களுக்கு உதவுவதாக மைத்திரியிடம் ஜேர்மனி அதிபர் உறுதி

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து, திருப்தி வெளியிட்டுள்ள ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், வடக்கிலுள்ள மக்களின் நலன்களுக்காக ஜேர்மனி அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

லசந்த கொலை சந்தேகநபர்களின் மாதிரி உருவப்படங்களை வெளியிட்டது காவல்துறை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனி அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் – மகாநாயக்க தேரர்களிடம் வடக்கின் புதிய ஆளுனர்

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை – முக்காற்பங்கு உறுப்பினர்களை காணவில்லை

துறை மேற்பார்வைக் குழுக்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும், மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று நாடாளுமன்ற, குழுக்களின் அறையில் ஆரம்பமான நிலையில், இதில், 62 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு இன்று காலை ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

யோசிதவுக்கு ஆதரவளித்த சிறிலங்கா கடற்படையினர் நால்வர் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கையில் பட்டி அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணி வீரர்கள் நால்வரை சிறிலங்கா கடற்படை இடைநிறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான சாரணர் ஒன்றுகூடல்

சிறிலங்காவின் அனைத்து மாவட்ட சாரணர்களும் பங்கேற்கும், ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.