ரெஜினோல்ட் குரே நியமனத்தை வரவேற்கிறது கூட்டமைப்பு – விக்கி மௌனம்
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா இன்னமும் இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த கால துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக் கூடாது. அதற்கு, கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆக்ராவில் இருந்து சிறிலங்காவின் மாத்தறை வரை தேசிய நெடுஞசாலை ஒன்றை அமைக்கும் புதிய திட்டத்தை இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக, நம்ப முடியாததாக, நிலையற்றதாக இருப்பதால் தான், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.