மேலும்

Archives

மகிந்தவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியின் தென்னந்தோட்டத்தில் மண்ணை அகழ்ந்து தேடுதல்

மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், சிறிலங்கா காவல்துறையினர் நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தி வருகின்றனர்.

இராணுவமய நீக்கம் நல்லிணக்கத்துக்கு முக்கியம் – ஒப்புக்கொண்டார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இராணுவமய நீக்கம் என்பது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு பகுதி என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.

அச்சமான அரசியல் சூழலை சிறிலங்கா மக்கள் நிராகரித்துள்ளனர் – நிஷா பிஸ்வால்

அச்சமான அரசியல் சூழலை சிறிலங்கா மக்கள் ஒன்றுபட்டு நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கலாம் – அமெரிக்காவில் மங்கள சமரவீர

சிறிலங்காவில் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளைப் பாராட்டுகிறார் ஜோன் கெரி – மங்களவைச் சந்திப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.

யோசிதவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை போர்க்கப்பல் உற்பத்தி பிரிவின் உயர்அதிகாரி சிறிலங்கா வருகை

இந்தியக் கடற்படையின்  போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையேற்றல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ள நியூசி்லாந்து பிரதமர் ஜோன் கீ, இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை அதிகரிப்பது குறித்து சமந்தா பவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.