காணி அமைச்சு ஜோன் அமரதுங்க வசமானது
சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சிறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த அமைப்பாளர்களை அதிரடியாக நீக்கியுள்ள, கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன, புதிதாக 26 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.
சீனக் கடற்படையின் மிகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.