சிறிலங்கா மரைன் படைப்பிரிவுக்கு திருகோணமலையில் அமெரிக்கா வழங்கும் பயிற்சி – படங்கள்
சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் திருகோணமலையில் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் திருகோணமலையில் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர நேற்று கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர், சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கடற்படையின் மரைன் படையினர் பயிற்சி அளிப்பதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர், ரோமன் குவாட்வ்லீக் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று, சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.