மேலும்

Archives

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியா அமைக்கும் 3000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டன.

நீதி மறுக்கப்பட்டதால் வெதும்பும் ரவிராஜ் குடும்பத்தினர்

கடந்த ஆண்டு நத்தார் தின வாரஇறுதி நாள் காலையில் பிரவீனா ரவிராஜ் பத்திரிகைகளைப் பார்த்த போது ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்பதே அவற்றின் தலைப்புச் செய்திகளாக இருந்தன.

வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?

சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்  நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல் – ஆதரவாளர்களால் பதற்றம்

அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்சவை, விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.

அம்பாந்தோட்டை விவகாரம் – மகிந்தவைச் சந்தித்து விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

நல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.