மேலும்

Tag Archives: வேட்பாளர்

நள்ளிரவுடன் முடிந்தது தேர்தல் பரப்புரைகள் – மீறினால் கடும் நடவடிக்கை

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட நடிகையிடம் பாலியல் இலஞ்சம் கோரிய மகிந்தவின் கட்சி

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்குகள், இராணுவ குடும்பத்தினரை வேட்பாளர்களாக நிறுத்துகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் போட்டியிடவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவில் பௌத்த பிக்குகளையும், படையினரின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகப் போகும் 2000 பெண் பிரதிநிதிகள்

புதிதாக தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவில் நடக்கும் சுவரொட்டிப் போர்

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப்பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

வேட்புமனு குறித்து மைத்திரி இன்னமும் முடிவெடுக்கவில்லையாம் – அமைச்சர் ராஜித புதுக்குண்டு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிட மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – இன்றைய கூட்டத்தில் மைத்திரி அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி இன்று முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இதொகாவுக்குள் பிளவு – மைத்திரியை ஆதரிக்க ஒரு பகுதியினர் முடிவு

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதொகாவுக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.