மேலும்

சிறிலங்காவில் நடக்கும் சுவரொட்டிப் போர்

poster-warசிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களின்படி, வேட்பாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டவோ, பதாகைகளை காட்சிப்படுத்தவோ கூடாது.

இந்த விதிமுறையை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பின்பற்றுவதாக இல்லை.

வடக்கு, தெற்கு என்று சிறிலங்கா முழுவதிலும், சுவரொட்டிப் பரப்புரைகள் நடந்து வருகின்றன.

ஆங்காங்கே காவல்துறையினரிடம் சிலர் பிடிபட்டாலும், வேட்பாளர்கள் தமது விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக சுவரொட்டிப் பரப்புரைப் போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

poster-war

இந்தநிலையில், வேட்பாளர்களின் பரப்புரைச் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு, ஆட்களை பணிக்கு அமர்த்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு 75 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் திணைக்களம் ஒதுக்கியுள்ளது.

இந்தநிலையில், இரவாடு இரவாக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்ற பின்னர், காலையில் காவல்துறையினர் சென்று அவற்றை அகற்றுகின்றனர்.

சிறிலங்கா முழுவதும், இது நாளாந்த நடவடிக்கையாக மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *