மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள்

tnaவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப்பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியின் பெயர் இடம்பெறவில்லை.

முன்னதாக, அவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் அதற்கு உடன்படவில்லை.

பின்னர், தேசியப்பட்டியலில் இடமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான போதிலும், அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததால், தேசியப்பட்டியலில் அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல்

  1. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
  2. பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம்
  3. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில்
  4. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்
  5. மயில்வாகனம் தேவராஜன்
  6. கனகநமநாதன்
  7. அந்தோனிப்பிள்ளை மேரியம்மா
  8. அருணாசலம் குணபாலசிங்கம்
  9. சூ.செ.குலநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *