மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விழிப்புநிலையில் இருக்கிறதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாவீரர்களை நினைவுகூர அனுமதியில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

திகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

போரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

போரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.