மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

புலிகளுக்கு நிதிசேகரித்த இலங்கைத் தமிழருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து, நிதி சேகரித்துக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

புலிகளுக்கு நிதி சேகரித்தார் என ஈழத்தமிழர் மீது ஜேர்மனி நீதிமன்றில் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில், ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நோர்வே – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது.

விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் கணக்கு தப்புமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் செல்வாக்கு தமிழ்ர்களுக்குச் சாதகமாக அமையும், என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவத்துடன் பேச்சு நடத்துகிறதாம் அரசு – ரணில் கூறுகிறார்

வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அடுத்த மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விழிப்புநிலையில் இருக்கிறதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாவீரர்களை நினைவுகூர அனுமதியில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.