மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

கதிர்காமர் கொலை குறித்து புதிய விசாரணை – குடும்பத்தினர் கோரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக, புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கதிர்காமரின் மகள் அஜிதா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.

பிரகீத் கடத்தல்: கைதான 4 இராணுவ அதிகாரிகளுக்கும் 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதியைப் பெற்றுள்ளது.

முன்கூட்டியே கசியாது ஐ.நா அறிக்கை – 48 மணிநேரத்துக்கு முன்னரே சிறிலங்காவிடம் கையளிப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர் யார்?

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது சுயசரிதையில் மகிந்தவின் திருகுதாளங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சந்திரிகா

போரை வெற்றி கொண்டது தானே என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உரிமை கோர முடியாது என மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அரசியல் கைதிகளே இல்லையாம்- விஜேதாச ராஜபக்ச கூறுகிறார்

சிறிலங்காவில்  அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.

புலிகள் தலைதூக்கவோ, பிரிவினைக்கோ இடமில்லை – சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

கடத்தப்பட்டவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் – காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.