முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா
ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.
ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.
விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே, வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.
தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.