தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை, நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் செல்வராசா ஜெயந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால செயற்பாடுகளை தமக்கு நினைவுபடுத்துவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தது யார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.