புலிகள் தலைதூக்கவோ, பிரிவினைக்கோ இடமில்லை – சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் விடுதலைப் புலிகளோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.
அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை, தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளம் வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.
தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இனவாதப் பரப்புரையில் இறங்கியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.