மேலும்

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு இடமளிக்காத ஜனநாயகப் போராளிகள்

vithyatharan-nomination  (1)சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையில், 10 வேட்பாளர்கள் இந்த சுயேச்சைக் குழுவின் சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் வித்தியாதரன் தலைமையில் சென்ற சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் தமது வேட்புமனுவைக் கையளித்தனர்.

இந்த சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள்

  1. நடேசபிள்ளை வித்தியாதரன் (யாழ்ப்பாணம்)
  2. கணேசலிங்கம் சந்திரலிங்கம் (யாழ்ப்பாணம்)
  3. இராசையா தர்மகுலசிங்கம் ( கரவெட்டி)
  4. சிவநாதன் நவீந்திரா (பருத்தித்துறை)
  5. விநாயகசுந்தரம் மோகனசுந்தரம் (பருத்தித்துறை)
  6. காளிக்குட்டி சுப்பிரமணியம் ( கற்கோவளம்)
  7. தங்கராசா தேவதாசன் (பருத்தித்துறை)
  8. சிவகுரு முருகதாஸ் (வசாவிளான்)
  9. குமாரவேலு அகிலன் (பூநகரி)
  10. வீரன் சக்திவேல் (கரவெட்டி)

vithyatharan-nomination  (3)vithyatharan-nomination  (1)விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் பெயரில் களமிறங்கியுள்ள இந்த சுயேச்சைக் குழுவில் பெண் வேட்பாளர்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் பெண் போராளிகளுக்கு சம வாய்ப்புகளை வழங்கி வந்த நிலையில், முன்னாள் போராளிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தி இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனநாயகப் போராளிகள் தமது வேட்புமனுவில் ஒரு பெண் வேட்பாளருக்கும் இடமளிக்கவில்லை.

அத்துடன் இந்த வேட்பாளர் பட்டியலில், தென்மராட்சி, தீவகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *