செவ்வாயன்று கொழும்பு வருகிறார் ராஜ்நாத் சிங்- நுவரெலியாவுக்கும் பயணம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே ரைம்ஸ்“ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பலாலி மற்றும், மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கும், உதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.