மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.
ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் 94 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.
பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விற்பனை செய்யும் உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.