மேலும்

Tag Archives: மில்லியன்

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு

அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம்

சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் 2 பயணிகளே வருகை – மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் 58.3 மில்லியன் டொலரைப் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிற்சர்லாந்து வங்கிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த, மைத்திரி தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள 15 மில்லியன் வாக்காளர்கள்

சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.