மேலும்

Tag Archives: பிரகீத் எக்னெலிகொட

மகிந்த ஆட்சியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை – 87 பேர் தாக்கப்பட்டனர்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் சிறிலங்காவில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவை சிறிலங்கா இராணுவம் உருவாக்கியதாக கூறவில்லை – ராஜித சேனாரத்ன

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சிறிலங்கா இராணுவத்தினரே உருவாக்கினர் என்று தான் கூறவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரகீத் விசாரணையில் அம்பலமான மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல் விவகாரம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கும் சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கிய புலனாய்வு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

கிரித்தல இராணுவ முகாமில் உள்ள முக்கியமான இராணுவப் புலனாய்வு ஆவணங்கள் இராணுவக் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைதாகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்டவர் பெயரை சந்தேகநபர்கள் வெளியிட்டனர் – விசாரணையில் திருப்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தும் உத்தரவை பிறப்பித்தவரின் பெயரை, விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேக நபர்கள் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோசப் படுகொலை, பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.