மேலும்

Tag Archives: பிரகீத் எக்னெலிகொட

பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இராணுவ அழுத்தங்களால் பிரகீத் கடத்தல் குறித்த விசாரணைகளை நிறுத்த ரணில் உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தல்: கேணல் சிறிவர்த்தனவை கைது செய்வதை பிற்போடுமாறு உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு காணாமற்போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி முகாம் ஒன்றில் சிறைவைப்பு?

தனது கணவர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடைய, இராணுவ அதிகாரிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவவிடம் ஒப்படைக்குமாறு, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட, சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரியுள்ளார்.

பிரகீத் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் – ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் கடத்தல் – உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சிக்குகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவரிடம் அடுத்த சில நாட்களுக்குள் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரகீத்தை கடத்திய இரு இராணுவப் புலனாய்வாளர்கள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களான இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.