மேலும்

Tag Archives: பாதுகாப்புச் செயலர்

நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்

நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சரத் பொன்சேகா அளித்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் விரைவில் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் பரப்பளவு குறைந்திருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்க வேண்டும் – கலாநிதி சரத் விஜேசூரிய

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து மீளாய்வு

நான்காவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் – உன்னிப்பாக கண்காணிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.