மேலும்

Tag Archives: பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் சீனா – போர்க்கப்பலையும் வழங்குகிறது

சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா

புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்காக பிக்குகள் போராட்டத்தில் குதிப்பர் – எச்சரிக்கிறார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக கணிசமானளவு பௌத்த பிக்குகள் வீதியில் இறங்குவார்கள் என்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிசை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்ற மோசடி- முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இரகசிய மரணப் படை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா

இரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.