மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா
நாமல் ராஜபக்சவின் சிறப்பு பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி அளித்தது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது.