இந்தியத் தூதுவருடன் நாமல் ராஜபக்ச சந்திப்பு
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று மதியம் இந்தியா ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்போது இந்தியா, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பரந்துபட்ட அளவிலான இருதரப்பு பங்காண்மை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர்களின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அண்மையில் கொழும்பில் உள்ள அரசாங்க இல்லத்தில் இருந்து, வெளியேறிய பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.