மேலும்

Tag Archives: தேசியப் பட்டியல்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதுரலிய ரத்தன தேரரிடம் இருந்து நாடாளுமன்ற பதவியை பறிக்க முயற்சி

நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயற்படப் போவதாக அறிவித்துள்ள அதுரலிய ரத்தன தேரர்,  ஐதேகவின் தேசியப் பட்டியல் ஆசனத்தை திருப்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் பீல்ட் மார்ஷல்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?

நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் யாருக்கு?- சம்பந்தன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மகிந்த – மைத்திரி அணிகளின் தேசியப்பட்டியல் மோதல் தீவிரம்

தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேசியப்பட்டியலில் இடம்பிடிக்க முனையும் மகிந்த அணியினருக்கு ஆப்பு வைக்கிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சந்திரிகா குமாரதுங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்வைத்துள்ள யோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.

வேட்பாளர் பட்டியலில் மகிந்தவுக்கு இடமில்லை – மைத்திரி திட்டவட்டமாக அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.