மேலும்

Tag Archives: ஜப்பான்

வெளிநாட்டுக் கடன்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்குத் தடை

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்தப் புதிய கடனையையும் வாங்குவதை நிறுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

விமானத்தளங்களின் சாபங்கள்- ட்ரம்ப் இட்ட கோட்டினால் அநீதிக்கு இலக்காகப் போகும் குழந்தைகள்

பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணவியல்பு தொடர்பாகத் தனது தந்தை பேராசிரியர் ந.சண்முகரட்ணம் அவர்களிடமிருந்து தனது சிறுவயதில் பெற்றுக்கொண்ட சில அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் Klassekampen  நாளிதழில் 03.02.17 எழுதிய இப்பதிவில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

அம்பாந்தோட்டை நோக்கி விரையும் அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பல்

அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் உதவி

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்கள் முதலீடுகளை பாதிக்கும் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய  அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுப் பயிற்சி: இந்தியா – சிறிலங்கா இடையே விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு

கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய போர்க்கப்பல்களை வாங்குகிறது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படையில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி நாளை கொழும்பு வருகிறார்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி சிறிலங்கா வரவுள்ளார்.