துறைமுக நகரத் திட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.


