மேலும்

Tag Archives: கொழும்பு

மாணவி வித்தியாவுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

புங்குடுதீவில், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 27ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்? – கொழும்பு வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஓகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில  வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்த அணியினரின் வெற்றிவிழா – கொழும்பில் இன்று ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இன்று துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில், கொழும்பில் மகிந்த ராஜபக்ச அணியினரால் இன்று போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் கடைசி நேரத்தில் ரத்து

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்து ஐந்து நாள் பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயரின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பு

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் ஆண்டகை, தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிப்பு

சதொச வில் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு, வரும் மே 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்படுகிறார் ஜெனரல் தயா ரத்நாயக்க?

பாகிஸ்தானுக்கான தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் – ஜோன் கெரி

சிறிலங்காவில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால்,  அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.