மேலும்

நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே கைதாவார் பசில் – நீதிமன்றம் உத்தரவு

basil-rajapakshaசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும், கைது செய்யுமாறு, கடுவெல நீதிமன்றம்  சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக ஊழல், மோசடித் தடுப்பு ஆணைக்குழு மற்றும் சிறிலங்கா காவல்துறையின் நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு ஆகியவற்றில், முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னைய ஆட்சிக்காலத்தில் பெருமளவு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியது, மாநாடு ஒன்றுக்கு 70 மில்லியன் ரூபாவை செலவிட்ட து உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

நேற்று கடுவெல நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்ட போது, பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும், இதுதொடர்பான நேரில் வந்து சாட்சியமளிப்பார் என்றும், அவரை காவல்துறையினர் கைது செய்வதில் இருந்து விலக்களிக்குமாறும், அவரது சார்பில் முன்னிலையான 20 சட்டவாளர்கள் கோரினர்.

ஆனால், அதற்கு அனுமதியளிக்க மறுத்த கடுவெல நீதிவான், பசில் ராஜபக்ச விமான நிலையத்தில் வந்திறங்கியதும், கைது செய்ய உத்தரவிட்டார்.

வரும் ஏப்ரல் 20ம் நாளுக்குப் பின்னர், பசில் ராஜபக்ச கொழும்பு வரவுள்ளதாக, அவரது சட்டவாளர்கள் கூறியிருந்தனர்.

எனவே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த சில நாட்களில், பசில் ராஜபக்ச தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *